search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதி மன்றம்"

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ‘மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போடவேண்டும் என்று வாக்காளர் களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல பிற வேட்பாளர்களும் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதனால், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் மதுரை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் கே.கே.ரமேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதால் இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முகாந்திரம் இல்லை என்றும் மனுதாரர் வேண்டுமென்றால் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகி தேர்தல் வழக்காக அங்கு தாக்கல் செய்யலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #BCCI #Sreesanth
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசந்த். கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

    இதுதொடர்பானை வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஸ்ரீசந்த்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது.

    2015-ம் ஆண்டு பாட்டியாலா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீசந்த் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஸ்ரீசந்த் மீதான வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்கவில்லை.

    இதனால் கேரளாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசந்த் மனுதாக்கல் செய்தார். அப்போது பிசிசிஐ விதித்துள்ள வாழ்நாள் தடையை நீக்கி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச்-ல் பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவு செல்லாது என அறிவித்தது.



    இந்நிலையில் பிசிசிஐ வாழ்நாள் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழங்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்றும் நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்த்ரசுட் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

    ஸ்ரீசந்த் தனது மனுவில், நான் கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன். இதுவே போதுமான தண்டனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    உச்ச நீதிமன்றத்தில் 14-ம் தேதி காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார். #CauveryIssue #SupremeCourt #DraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளதால் மே14-ம் தேதி மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கூடுதல் அவகாசம் கேட்கலாம் என்றும் பேசப்பட்டது.

    ஆனால், 14ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மேற்கொண்டு அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். #CauveryIssue #SupremeCourt #DraftScheme

    ×